நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறையின் இணையதள பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம் !
தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறையின் செயல்பாடுகள்:
- சட்டம் தொடர்பாக:
தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் அதனைச் சார்ந்த பணியாளர்களுக்கான இந்திய தொழிலாளர் நலச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்.
பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பொருளாதார இழப்பு மற்றும் பணியாளர் திறன் மதிப்பீட்டாய்வு என்கிற பெயர்களில் பறிக்கப்படும் பணியாளர்களின் வேலையை திரும்ப பெறுவது மற்றும் உரிய இழப்பீடு பெற்று தருவது தொடர்பாக சட்ட உதவி செய்தல்.
- திறன் மேம்பாடு:
பணியாளர்களுக்கான தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறைகளை அதில் சிறந்து விளங்குபவர்களைக் கொண்டு நடத்துதல்.
அனைவரும் பயன்பெறும் வகையில் துறை சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் அதை சார்ந்த விடயங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இணைய பக்கம் ஒன்றை உருவாக்கி நிர்வகித்தல்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் சான்றோர்களை அழைத்து துறை சார்ந்த மாநில/இந்திய/உலக அளவிலான கருத்தரங்குகளை நடத்துவது.
அக்கருத்தரங்குகளில் மக்கள் வாழ்வியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை, கல்வி, இயற்கை, மருத்துவம், வேளாண்மை, சுகாதாரம் போன்றவற்றை தகவல் தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்துதல் தொடர்பாக துறை சார்ந்து வரும் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட வாய்ப்பளித்து அவற்றில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து பரிசளித்து பெருமை படுத்துவது மற்றும் அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வர முன்னெடுப்பது.
- சமூக நல செயல்பாடு:
தற்கால தேவைக்கேற்ற பொது நலன் சார்ந்த கைபேசி செயலிகளை (Mobile App) உருவாக்கி சமூகத்திற்கு அளிப்பது.
சமூகத்தின் பல்வேறு விடயங்களை பற்றிய விழிப்புணர்வ உருவாக்கும் வகையில் எளிய வடிவிலான இயங்கு படங்களை (Animation) உருவாக்கி பரப்புவது.
அரசு பள்ளிகளை தெரிவு செய்து சமூக நலனோடு கூடிய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை கொண்டு சேர்த்து விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் இது தொடர்பான போட்டிகளை நடத்தி பரிசு வழங்கி ஊக்கப்படுத்தல்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற விரும்பும் கிராமப்புறங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறையின் அறிமுகம், திறன் உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குதல்.
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறையில் உறுப்பினராக இணைவதற்கு கீழ்கண்ட பக்கத்தில் சென்று தகவல்களை பதியவும்.