கண்டன அறிக்கை | NTK ITPW

          உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் என்னுமிடத்தில் 19 வயதுடைய சகோதரிக்கு நடந்திருக்கும் கொடுமை நம் மனசாட்சியை உலுக்குகிறது.‘பேடி பசாவ் பேடி பத்தா ’ – பெண் குழந்தைகளைக் காப்போம் என விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலத்தில் இந்த அவலம் நடந்திருக்கிறது.குற்றவாளிகளைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்காத மாநில அரசு, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, இறுதிச்சடங்கை அப்பெண்ணின் குடும்பத்திற்குக் கூட அறிவிக்காமல் நடத்தியிருப்பது அரச பயங்கரவாதம்.

          பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறையும் கொடுமைகளும் தொடர்கதையாக இருப்பது, நிர்பயா வழக்கிலிருந்து அரசு எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. 2012 ஆம் ஆண்டில் நடந்த நிர்பயா படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கே இந்த வருடம்தான் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.எனில் , இவர்களுக்கு தண்டனை கிடைக்குமா ? அந்த தண்டனைதான் இதற்கு தீர்வாகுமா? இதற்கு முடிவு எப்போது ?

          பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முதியோருக்கும் மதிப்பு அளிக்காத சமூகம் நாகரிகம் அடைந்த சமூகமாக ஏற்றுக் கொள்ளப்படவே முடியாது.உலக அரங்கில் வல்லரசாகத் துடிக்கும் நம் நாடு பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்காமல் எப்படி அடையப் போகிறது?ஆசிபா வழக்கில் வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருவது தடைபடும் எனக் கூறிய அரசு, இப்போதும் அதைத் தான் கூறப்போகிறதா?

          நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பணியாளர் பிரிவின் சார்பாக இச்சம்பவத்திற்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இதனை ஒரு தனிப்பட்ட நிகழ்வாகக் காணாமல், இக்கொடுமை இனியும் நிகழாமல் இருக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை,
நாம் தமிழர் கட்சி.
IT Professionals Wing, Naam Tamilar Katchi.
#ITPW_NTK