தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை(ITPW) – உறுப்பினர் சேர்க்கை

FLASH NEWS: நாம் தமிழர் கட்சியினர் சமூக ஊடக, வளைத்தளங்களில் பொதுவாக கடைபிடிக்க வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை: ✅தரமான, மதிப்பு மிக்க கருத்துக்களால் அதனை எழுதுபவர், பதிவிடுபவர், மீள் பதிவு செய்பவர், பகிருபவர் என ஒவ்வொருவரும் பெருமைப்படக் கூடிய வகையில் இருந்தால் மட்டுமே அத்தகைய செய்திகளை, கருத்துக்களை உருவாக்கவும்; பகிரவும்! ✅சொல்லக்கூடிய கருத்துக்கள் ஒருவருடைய சுயமானவையாக, சிறந்தவையாக இருக்க வேண்டும்! ✅கட்சியின் அடையாளத்தையும், கட்சியின் உறுப்பினரான உங்களுடைய அடையாளத்தையும் தொலைக்கா வண்ணம் பதிவுகள், சமூக ஊடக உரையாடல்கள் இருத்தல் வேண்டும்! ✅நீங்கள் இடும் பதிவுகளுக்கான பார்வையாளர்கள் யார் என்பதைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு கடத்துவதற்கு ஏதுவான செய்திகளைப் பெற நடப்பு சமூக-அரசியல் சார்ந்த விடயங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்! ✅உங்களது நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் மற்றும் உங்களை பின் தொடர்பவர்கள் அடங்கிய சமூக ஊடகப் பார்வையாளர்களோடு தொடர்பிலேயே இருக்கவும்; அவர்களோடு அடிக்கடி உரையாடவும்! ✅மற்றொருவருடைய கருத்தை எடுத்து பதிவிடும் போதோ, மீள் பதிவு செய்தும் பகிரும் போதோ அந்தக் கருத்தின், செய்தியின் உரிமையாளரை இணைத்தோ அல்லது அவரது பெயரைக் குறிப்பிட்டோ செய்தால் அத்தகைய நபருடனான சமூக வளைத்தள உறவு மேலும் வலுப்படும்! ❎தனது பார்வையாளர்களை கடுப்பேற்றும், பொறுமை இழக்க வைக்கும் வகையில் ஒரே செய்தியைத் திரும்பத் திரும்ப பதிவிடுவதை, பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்! ❎பிறரின் தனிப்பட்ட, அந்தரங்க புகைப்படங்களைப் பதிவிடுவதோ, அறத்திற்கு மாறாக ஒருவரது தனிப்பட்ட வாழ்வு குறித்த கருத்துக்களை எழுதுவதோ, சட்டத்திற்கு புறம்பான செய்திகளை, வதந்திகளை உருவாக்குவதோ, பரப்புவதோ கட்டாயம் கூடாது! ❎தலைப்புக்கு பொருத்தமில்லாத, கூற வரும் கருப்பொருளை சிதைக்கும் வகையிலான கருத்துக்களை, பதிவுகளைத் தவிர்க்கவும்! ❎குறுகிய காலத்தில் அதிகளவிலான நட்புகளையோ, பின் தொடர்பவர்களையோ, விருப்பக் குறியிடுபவர்களைப் பெறுவதிலேயோ குறியாக இல்லாமல் தொடர்ந்து சிறந்த கருத்துக்களை பதிவிடுவதில் மட்டுமே கவனம் செலுத்தினால் பார்வையாளர்களின் எண்ணிக்கை தானாக அதிகரிக்கும்! ❎சமூக ஊடகங்களில் ஒருவரை பகடி, கேலி, கிண்டல் (Trolls) செய்வதைக் கட்டாயம் தவிர்க்கவும்! ❎பதிவுகளில் தேவையற்ற, அதிகப்படியான, பொருத்தமில்லாத மேற்கோள்களைத் (Tags) தவிர்க்கவும்! #NTKSocialMediaConvention2020
| தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை | நாம் தமிழர் கட்சி |

அன்பு நண்பர்களுக்கு புரட்சிகர வணக்கம் !!

நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை(ITPW)யில் இணைய, நீங்கள் தகவல் தொழில்நுட்பத் துறை / கணினி / மென்பொருள் / வன்பொருள் சார்ந்த நிறுவனங்களில் (IT/ITeS/BPO/Computer Aided/Software Aided Company) வேலை பார்த்தலும் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருத்தலும் அவசியம்.

இப்பிரிவுக்கான பல்வேறு செயற்பாட்டுக் குழுக்கள் கட்டமைக்கப்பட்டு, ஆக்கப்பூர்வமாக அதனை செயல்படுத்தியும் வருகிறோம். 

இப்பிரிவில் தாங்கள் இணைந்த பிறகு இப்பிரிவிலிருந்து நண்பர்கள் தங்களை தொடர்பு கொள்வர்; அதற்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பை நல்கவும்.

 

நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக இணைவதற்கு கீழ்கண்ட இணைய தளத்தில் சென்று பதியவும்.

https://join.naamtamilar.org/

நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ இணைய தளம் :   

https://www.naamtamilar.org/

 

நாம் தமிழர் கட்சியின் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள்
பாசறையில் இணைய, நீங்கள் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருத்தலும் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவதும் அவசியம். 

ஆம்யெனில், கீழ்க்கண்ட படிவத்தை நிரப்பவும்  /  Fill the below Form if you’re a NTK Member & Working in IT /ITeS related Company.

ITPW – உறுப்பினர் சேர்க்கை படிவம்

 

நன்றி