வணக்கம்,
முகாம்களிலுள்ள புலம் பெயர்ந்த ஈழத்தமிழ் சொந்தங்கள் ஊரடங்கினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதார சிக்கல்களை சந்தித்துவரும் செய்தியறிந்த உடன், அவர்களுக்கு உதவும் பொருட்டு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு பொருளாதார உதவி செய்வது என தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை முடிவெடுத்தது.
இந்த செய்தியை உறுப்பினர்களிடம் அறிவித்தவுடன், உடனடியாக தங்களது சிக்கலான பொருளாதார நிலையினையும் பின்தள்ளி நமது உறவுகளின் நலன் காக்க எதிர்பார்த்ததை விட அதிகப்படியான பொருளாதார உதவி அளித்து ஊக்கப்படுத்திய அனைத்து உறுப்பினர்களுக்கும் நமது பாசறையின் சார்பாக பொறுப்பாளர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்!
நமது அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் கூறுவது போல், ‘நாம் வாக்குக்கானவர்கள் அல்ல அடுத்த தலைமுறையின் வாழ்க்கைக்கானவர்கள்‘ என்பதை மீண்டும் நிரூபித்த ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை தனது நன்றியை உரித்தாக்குகிறது. இதேபோல் எதிர்வரும் ஒவ்வொரு சூழ்நிலையையும் நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் என்று நமது பாசறை உறுதி ஏற்கிறது.
ஏற்கனவே உறுதி அளித்தது போல் இந்த நிவாரண நிகழ்வு தொடர்பான அனைத்து வரவு செலவு கணக்குகளையும், கொடையாளர் பட்டியலையும், பயனாளர் பட்டியலையும், முகாம்களின் பட்டியலையும் மற்றும் புகைப்படங்களையும் உங்கள் பார்வைக்காக ஆவணப்படுத்தியுள்ளோம். இதனை சரிபார்க்க அனைத்து உறுப்பினர்களையும் வேண்டுகிறோம்.
இது தொடர்பாக மேலும் உள்ள கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பாசறை பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி !
இப்படிக்கு,
தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை,
நாம் தமிழர் கட்சி.