பனைத்திருவிழா | செப்டம்பர் 8, 2019 | NTK ITPW

              இன்று சுற்றுச்சூழல் பாசறை நடத்திய பனைத் திருவிழாவில் நமது பிரிவின் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாசறை உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு மகிழ்ந்தனர்.

மாதாந்திர கலந்தாய்வு | ஆகத்து 2019 | NTK ITPW

இன்று நடைபெற்ற கலந்தாய்வில் கடந்த வேலூர் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், செப்டம்பர் 01-ல் தஞ்சாவூரில் நடைபெற உள்ள அருண்மொழி சோழனுக்கு(ராச ராச சோழன்) நமது கட்சியின் சார்பில் நடத்தும் நிகழ்வு குறித்தும் மற்றும் இப்பிரிவின் அடுத்த கட்ட திட்டங்கள் & இப்பிரிவிற்க்கான உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கபட்டது.

வேலூர் பாராளுமன்ற தேர்தல் பரப்புரை | சூலை 27 & 28, 2019 | NTK ITPW

சூலை 21, 2019 அன்று நடைபெற்ற கலந்தாய்வின் முடிவுப்படி, வேலூர் பாராளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை நமது பிரிவின் உறுப்பினர்களால் சூலை 27 & 28, 2019 தேதிகளில் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களுடன் இணைந்து வேலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. இதில் விருப்பமுள்ள உறுப்பினர்கள் பரப்புரையில் பங்கேற்றும், நிதியுதவியும் அளித்தனர். மேலும் சேகரிக்கப்பட்ட நிதியானது(ரூ. 35,000) நமது பிரிவின் சார்பாக வேட்பாளர் தீபலட்சுமி அவர்களிடம் கொடுக்கப்பட்டது.

https://timesofindia.indiatimes.com/city/madurai/techies-from-chennai-bengaluru-make-a-mark-at-election-campaign-in-vellore/articleshow/70517319.cms

வேலூர் தேர்தல் பிரச்சாரம் குறித்து திட்டமிடலுக்கான கலந்தாய்வு | சூலை 21, 2019 | NTK ITPW

அடுத்த வார வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில், தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பிரிவின் சார்பில் பங்கேற்பது குறித்து திட்டமிடலுக்கான கலந்தாய்வு இன்று(சூலை 21, 2019) நமது கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பிரச்சாரத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்த நபர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற தேர்தல் பரப்புரை | 2019 | NTK ITPW

நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பிரிவின் சார்பாக முடிவெடுக்கப்பட்ட தேர்தல் பரப்புரைத் திட்டங்கள் கீழ்க்கண்ட பல்வேறு வழிகளில் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது.
*பாஜக, காங்கிரசுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதற்கான 100 காரணங்கள் புள்ளி விவரங்களுடன் தமிழிலும், ஆங்கிலத்திலும் தொகுத்து வெளியிடப்பட்டு பரப்பப்பட்டது.

*பாஜக, காங்கிரஸ் அரசுகள் விவசாயிகளுக்கானவைகள் அல்ல என்பதை விளக்கும் தொகுப்பு தகுந்த புள்ளி விவரங்களுடன் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு பரப்பப்பட்டது.

*தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் நாம் தமிழரின் செயற்பாட்டு வரைவின் முக்கிய அம்சங்கள் தயாரிக்கப்பட்டு பரப்பப்பட்டது.

*இப்பிரிவின் சார்பில் பல மொழிகளிலான அத்தகைய துண்டறிக்கைகள் சுமார் 11,000 என்றளவில் அச்சிடப்பட்டு சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மற்றும் அதன் பணியாளர்கள் அதிகம் கூடும் கீழ்க்கண்ட இடங்களில் 07/04/19 முதல் 16/04/19 வரை விநியோகிக்கப்பட்டது.

*சிப்காட் வளாகம், சிறுசேரி
*மெரினா மால், சிறுசேரி
*விவிரா மால், நாவலூர்
*OMR Food Street, நாவலூர்
*நாவலூர் சந்திப்பு
*சோழிங்கநல்லூர் சந்திப்பு
*எல்காட் வளாகம், சோழிங்கநல்லூர்
*சென்னை ஒன் வளாகம், துரைப்பாக்கம்
*கந்தன்சாவடி பேருந்து நிறுத்தம்
*Ascendas ஐடி பார்க், தரமணி
*டைடல் பார்க், தரமணி
*ராமானுஜம் ஐடி பார்க், தரமணி
*திருவான்மியூர் ரயில் நிலையம்
*ஃபீனிக்ஸ் மால், வேளச்சேரி
*கிண்டி ரயில் நிலையம்
*பரனூர் ரயில் நிலையம், மகேந்திரா சிட்டி
*மகேந்திரா சிட்டி பேருந்து நிறுத்தம்
*DLF ஐடி பார்க், போரூர்
மற்றும் கிருட்டினகிரி – ஓசூர் பகுதி

*நாம் தமிழரின் ‘பெண்ணியம் போற்றுவோம்’ என்ற திரையரங்க விளம்பரம் இப்பிரிவின் சார்பாக தயாரிக்கப்பட்டு, இப்பிரிவால் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று இப்பிரிவின் உறுப்பினர்கள் மட்டுமல்லாது இப்பிரிவைச் சாராத நபர்களின் பெரும் நிதிப் பங்களிப்போடு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழ்க்கண்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

*Ega-Deluxe – சென்னை
*Devi Cineplex – சென்னை
*Devi Cineplex-Bala – சென்னை
*Devi Cineplex Paradise – சென்னை
*Sangam Multiplex-Sangam – சென்னை
*Albert-Main Screen – சென்னை
*Woodlands Screen 4 – சென்னை
*Bharat Theatre – சென்னை
*Aravind Theatre – சென்னை
*Meenakshi Theatre – சென்னை
*S2 Cinemas Perambur Screen 1- சென்னை
*S2 Cinemas Perambur Screen 2- சென்னை
*S2 Cinemas Perambur Screen 3 -சென்னை
*S2 Cinemas Perambur Screen 4 -சென்னை
*S2 Cinemas Perambur Screen 5 -சென்னை *KG Cinemas-Raagam – கோவை
*Darsana Theatre – கோவை
*Archana Theatre – கோவை
*Laxmi Theatre – கோவை
*Shanthi Theatre – கோவை
*Ganga Theatre – கோவை
*Guru Theatre – கோவை
*Balaji Theatre – புதுச்சேரி
*LA Multiplex-Maris – திருச்சி
*ARRS Multiplex Screen 4 – சேலம்
*TPV Multiplex Screen 1 – சேலம்
*Ellora Theatre – கரூர்
*Tara Theatre – கிருட்டினகிரி
*Sri Laxmi Devi Paradise – ஓசூர்
*Kasi Kalaiarangam – கும்பகோணம்
*PSS Multiplex Screen 1 – தென்காசி
*PSS Multiplex Screen 3 – தென்காசி
*Kalyan Theatre Screen 1 – விழுப்புரம்
*Abirami – Abirami – ஈரோடு
*Pandian Theatre – காரைக்குடி
*Jagan Theatre – ராமநாதபுரம்
*Sri Lakshmi Thirai Arangam – துறையூர்
*Sakthi Theatre Screen 1 – திருவண்ணாமலை

*இப்பிரிவு உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட கொசவு சட்டைக்கான (டி சர்ட்) நிதிப் பங்களிப்பின் மூலம் அது தயாரிக்கப்பட்டு இப்பிரிவு உறுப்பினர்களிடம் விநியோகிக்கப்பட்டது. இதுவரை இதனை கிடைக்கப் பெறாதவர்கள் இப்பிரிவின் அதற்கான நிர்வாகியை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும்.

*இது தவிர இப்பிரிவின் சார்பாக சில வேட்பாளர்களுக்கான சிறு சிறு காணொளிகள், சிறு சிறு வடிவமைப்பு பிரசுரங்கள் ஆகியவையும் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டது.

மேற்கண்ட அனைத்து வேலைகளையும் குறைந்த கால அவகாசத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்க முக்கிய காரணமாக இருந்த கீழ்க்கண்ட நமது நண்பர்களை இப்பிரிவு மனதார வாழ்த்துகிறது.

*புள்ளி விவரங்கள், செயற்பாட்டு வரைவு தொகுப்பு : சஞ்சய், சிந்துஜா
*மொழிபெயர்ப்பு : ஷரவண்குமார், ரிஷிகாந்த், சஞ்சய்
*மொழிபெயர்ப்பு சரிபார்ப்பு : சுனந்தா, பாலாஜி – சுற்றுச்சூழல் பாசறை
*ஊடகத் தொடர்பு: திருநாவுக்கரசு
*துண்டறிக்கை உள்ளிட்ட அனைத்து வடிவமைப்பு : உமாபதி, அருள், சுஜாதா
*துண்டறிக்கை அச்சடிப்பு : சஞ்சீவ் குமார்
*துண்டறிக்கை பரப்புரை திட்டம் : சஞ்சீவ் குமார், விக்னேஷ்
*டி சர்ட் வடிவமைப்பு, தயாரிப்பு: சஞ்சீவ் குமார்
*திரையரங்க விளம்பரக் காணொளி உருவாக்கம் – சிவசங்கரி
*திரையரங்க விளம்பரக் காணொளி தேர்தல் ஆணைய அனுமதி – சிவசங்கரி, சஞ்சய், கார்த்திக்கேயன்
*திரையரங்குகளுக்கான நிதி சேகரிப்பு – சிவசங்கரி
*திரையரங்குகளில் வெளியீடு – சிவசங்கரி, திருநாவுக்கரசு

இதுபோக ஒரு வாரத்திற்கும் மேலாக இப்பிரிவின் சார்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்ற துண்டறிக்கை பரப்புரையில் பங்கேற்ற இப்பிரிவின் அனைத்து நண்பர்களுக்கும் இப்பிரிவு தனது புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக குறுகிய கால இடைவெளியில் திட்டமிடப்பட்ட இப்பிரிவின் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் தேவைப்பட்ட பொருளாதார உதவிகளை உடனடியாக செய்து நிதிப் பங்களிப்பில் பங்கேற்ற இப்பிரிவின் உறுப்பினர்களுக்கும், திரையரங்கு விளம்பரத்திற்காக பொருளாதார ரீதியில் பேருதவி செய்த இப்பிரிவைச் சாராத பிற நாம் தமிழர் நண்பர்களுக்கும் இப்பிரிவு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

மேற்கண்டவைகள் தொடர்பான முழு வரவு, செலவு கணக்கு விவரங்கள் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் துவக்கப்பட்ட நாம் தமிழரின் இந்த தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவின் அனைத்து விதமான பணிகளுக்கும் தொடர்ந்து பேராதரவாய் நின்ற, நிற்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு இப்பிரிவுக்கான தங்களது ஆதரவை அனைத்து வகையிலும் தொடர்ந்து நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எழுவர் விடுதலை வேண்டி மனித சங்கிலி | மார்ச் 09, 2019 | NTK ITPW

இன்று (மார்ச் 09, 2019) எழுவர் விடுதலை வேண்டி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற மனித சங்கிலியில் நமது பாசறை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.