உலக மனித உரிமைகள் நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் | World Human Rights Day Awareness Conference | 08-12-2019

 

 

குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா மற்றும் நாடு முழுவதும் கொண்டு வரப்படவுள்ள தேசிய குடியுரிமைப் பதிவேடு சனநாயகத்திற்கு எதிரானதென நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.

காசுமீரில் நடக்கும் வன்முறைகளை கண்டிப்பதோடு பல்வந்த்சிங் ரஜோனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

******************************************************************************

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில்  சென்னையில் நடைபெற்ற மனித உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கில் மாநிலம் முழுவதிலுமிருந்து மனித உரிமை ஆர்வளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த கருத்தரங்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து மனித உரிமை ஆர்வளரும், டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான திரு.பாரிவேந்தன் அவர்கள் கலந்துரையாடினார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான திரு.ராஜீவ்காந்தி அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் குறித்த விவரித்தார். கல்வி உரிமைச் சட்டம் மற்றும் புதிய கல்விக்கொள்கை குறித்து கல்வியாளர் பேராசிரியர் திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் எடுத்துரைத்தார்.

நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறையின் சார்பில் டிசம்பர் 8 2019 ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மனித உரிமை ஆர்வளர்களும், நாம் தமிழர் கட்சியினரும் பெருமளவில் கலந்து கொண்டனர். அப்பாசறையின் பொறுப்பாளர்களான திரு.மதுசூதனன், திருமதி. சிவசங்கரி ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினக் கருத்தரங்கின் இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1: குடியுரிமைச் சட்ட திருத்த வரைவு மசோதா 

பிறநாட்டு மதச்சிறுபான்மை ஏதிலிகளைப்  பாதுகாக்கிறோம் எனும் பெயரில் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் வண்ணம் இந்திய ஒன்றிய அரசு கொண்டு வரும் மத அடிப்படையிலான குடியுரிமைச் சட்டத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தியாவிலுள்ள இலங்கையைச் சார்ந்த மதச்சிறுபான்மையினரான ஈழத்தமிழர்களை இந்தச் சட்டத்திருத்தத்தின் கீழ் கொண்டு வராததின் அடிப்படையில் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதை இந்திய ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்கிறது என்பதையும்  இந்த அவை சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தீர்மானம் 2: தேசிய குடியுரிமைப் பதிவேடு 

இந்திய ஒன்றிய அரசு நாடு முழுமைக்கும் கொண்டு வரத் திட்டமிடும் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டின் மூலம் இலட்சக்கணக்கான மக்களை நாடற்றவர்களாக மாற்றும் மனிதாபிமானமற்ற திட்டத்தை இந்த அவை வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 3: காசுமீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் 

காசுமீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை இந்த அவை வன்மையாகக் கண்டிப்பதுடன், காசுமீர் மக்கள் அவர்களின் சொந்த மண்ணில் சுதந்திரமாக அனைத்து உரிமைகளையும் பெற்று நிம்மதியாக வாழச் சர்வதேசச் சமுதாயம் குரல் கொடுக்க வேண்டுமென இந்த அவை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4: பல்வந்த் சிங் ரஜோனாவின் தூக்குத்தண்டனையை ரத்து செய்தல்

எப்பொழுது வேண்டுமானாலும் தூக்கிலிடப்படலாம் என்ற நிலையில் கடந்த 24 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் சீக்கியர் பல்வந்த் சிங் ரஜோனாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் அத்தூக்குத் தண்டனையை உடனடியாக ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய ஒன்றிய அரசையும், பஞ்சாப் மாநில அரசையும்  இந்த அவை வற்புறுத்துகிறது.

தீர்மானம் 5: 29 ஆண்டுகளாக சிறையில் வாடும் எழுவரை விடுதலை செய்தல்

ஆயுள் தண்டனை பெற்று 29 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள  முருகன், நளினி, சாந்தனு, பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்களை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் படி தமிழ்நாடு அரசின் அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்று அவர்களை உடனே விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு ஆளுநரையும், இந்திய ஒன்றிய அரசையும் இந்த அவை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6: மனித உரிமைப் போராளி கிலானி மறைவுக்கு இரங்கல்

சிறைவாசிகளின் உரிமைகள் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கிப் போராடி வந்த மனித உரிமைப் போராளி பேராசிரியர் சையது அப்துல் ரஹ்மான் கிலானி அவர்களின் மறைவு மனித உரிமை போராட்டக் களத்திற்கான பேரிழப்பு என்பதை இந்த அவை வருத்தத்துடன் பதிவு செய்கிறது.

தீர்மானம் 7: தமிழ்நாடு அரசு  அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோருதல்

நீண்டகாலமாகத்  தமிழகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் இந்த அவை கோருகிறது.

தீர்மானம் 8:ஈழத்தமிழர்கள் கவலையுறும் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல்

தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை முன்னின்று நடத்திய கோத்தபய ராஜபக்சே இப்போது இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள நிலையில் அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் எவ்வித அச்ச உணர்வுமின்றி சுதந்திரமாக வாழும் நிலையை ஏற்படுத்திடச் சர்வதேசச் சமூகம் உதவுமாறு இந்த அவை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 9: குடியுரிமைச் சட்டத் திருத்த வரைவு மசோதாவில் விடுபட்டுள்ள ஈழத்தமிழர்கள்

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவில் ஒரு புறம் இசுலாமிய ஏதிலிகளை அவர்களின் சொந்த நாட்டில் மதப்பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் அவர்களைப் புறக்கணித்து அநீதி இழைத்துள்ள இந்திய ஒன்றிய அரசு மறுபுறம் இலங்கையின் சிறுபான்மை மதமான இந்துக்களாக அடையாளப்படுத்தப் பட்டுள்ள ஈழத்தமிழர்களையும் புறக்கணித்துள்ள இந்திய ஒன்றிய அரசின் இரட்டை வேடத்தை தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் கண்டிக்க வேண்டுமென இந்த அவை கோரிக்கை விடுக்கிறது.

தீர்மானம் 10: சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காட்டு மொழியாகத் தமிழ்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 348 (2)ன் படியும், ஆட்சி மொழிச் சட்டத்தின் 7 வது பிரிவின் படியும் தமிழைச் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகக் கொண்டு வர மேலும் காலம் தாழ்த்தாமல் உடனே நடவடிக்கை எடுக்குமாறு இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் இந்த அவை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 11: மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து உயிரிழந்த 17 அப்பாவிகள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 அப்பாவி ஏழைகள் உயிரிழந்ததற்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தருவதோடு மேற்கொண்டு இதனைப் போன்ற அசம்பாவிதங்கள் நேரா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இந்த அவை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 12: சர்வதேசச் சட்டங்களின் அடிப்படையில் ஈழ ஏதிலிகளை நடத்தக் கோருதல்

இந்திய ஒன்றியத்தில் நீண்ட காலமாகத் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் ஏதிலிகளுக்கான பன்னாட்டுச் சட்டங்களுக்கு ஏற்ப இந்திய ஒன்றிய அரசு, மாநில அரசுகளால் வழங்கப்பட்டு இந்தியாவில் வாழும் ஏனைய நாட்டு ஏதிலிகள் போல் அங்கீகரிக்கப்பட வேண்டுமென இந்த அவை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 13: கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருதல்

இந்திய ஒன்றியம் முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டு வருவதையும், ஆரம்பக் கல்வியிலேயே பொதுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவதையும்  கைவிடுமாறும், கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுமாறும் இந்திய ஒன்றிய அரசை இந்த அவை வற்புறுத்துகிறது.

தீர்மானம் 14: பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனையும், பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாப்பும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் புரிந்த குற்றவாளிகளை விரைவு நீதிமன்றங்கள் அமைத்து உடனடியாக அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களுக்கு குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளால் எவ்வித பாதிப்பும் நேராத வகையில் தகுந்த பாதுகாப்பு அளித்திட இந்திய ஒன்றிய அரசையும் மற்றும் மாநில அரசையும் வலியுறுத்துகிறோம்.

 

CAB and NRC are unconstitutional says NTK on World Human Rights Day

NTK activists condemn rights violations in Kashmir and seek commutation of death sentence to Balwant Singh Rajoana

*****************************************************************

On the eve of the International Human Rights Day 2019, Naam Tamilar Katchi organised a special Human Rights conference, which was attended by activists from across the state. Human Rights activist and Supreme Court lawyer Mr. Pariventhan dwelt on the use of the Right to Information Act. Chennai High Court lawyer Mr. Rajivgandhi spoke about Constitutional rights and educationist Professor Kalyanasundaram emphasized the importance of Right to Education and the demerits of the new National Education Policy.

Human rights activists and Naam Tamilar Katchi cadres participated in the event organised by the IT Employees Wing of the Naam Tamilar Katchi, Mr. Madhusudhanan and Ms.Sivasankari coordinated the event.

Observing International Human Rights Day on 8 December 2019, after due deliberations, the following resolutions were unanimously adopted:

Resolution 1: Citizenship Amendment Bill

Naam Tamilar Katchi strongly condemns the religion-based Indian Citizenship Amendment Bill proposed ostensibly to protect refuges from religious minority communities. NTK denounces this move which will dismantle the very foundations of the Constitution of India. The party notes with concern that the Indian Union government is accepting the fact that Tamils are not Hindus by excluding Eelam Tamils, who are a religious minority in Sri Lanka, from the bill.

Resolution 2: National Register for Citizenship

NTK believes that the Citizenship Amendment Bill is a precursor to the National Register for Citizenship (NRC), which is a dangerous move likely to culminate in making lakhs of peoples as refugees in their own country. NTK warns the government of serious consequences if CAB and NRC are hastily implemented.

Resolution 3: Human Rights Violations in Kashmir

Naam Tamilar Katchi strongly condemns the continuing human rights violations in Kashmir. NTK demands that all kinds of embargo on the life of Kashmiris must be removed and the Kashmiri leadership and activists must be released from prisons. NTK hopes that the international community will play an effective role in ensuring that the Kashmiris’ rights to live a free and peaceful life in their homeland is fully respected.

Resolution 4: Commute Death sentence of Balwant Singh Rajoana

We urge the government of India to commute the death sentence of Balwant Singh Rajoana -a Sikh who has been suffering in prison, waiting to be hung, for the past 24 years, to a lifetime sentence on humanitarian grounds.

Resolution 5: Release 7 individuals who are in prison for 29 years

Having been sentenced to life imprisonment, the seven Tamils, Murugan, Nalini, Santhanu, Perarivaalan, Jayakumar, Robert Payas and Ravichandran, have remained imprisoned for the past 29 years. On the occasion of International Human Rights Day, when the whole world is talking about upholding human rights, NTK reiterates that it is time to talk of prisoner rights as well. NTK urges the governor of Tamil Nadu and the Indian Union government to release them without any further delay by accepting the resolution passed by the Tamil Nadu state assembly under Article 161 of the Constitution of India.

Resolution 6: Homage to Kashmiri human rights activist SAR Geelani

This gathering of human rights defenders pays homage to the late human rights activist Sayed Abdul Rahman Geelani – the lone voice of Kashmiri rights, who was also the founder of Committee for Protection of Prisoner Rights and registers with a heavy heart that his demise is a great loss for human rights activism.

Resolution 7: Tamil Nadu urged to release all political prisoners

This meeting appeals to the Indian government and the Tamil Nadu government to immediately release all Tamil political prisoners who have been imprisoned for a long time.

Resolution 8: Sri Lanka situation cause for concern for Eelam Tamils

This house observes that the election of Gotabaya Rajapaksa as President of Sri Lanka, who led the genocide of Tamils in Tamil Eelam, is a testing time for Eelam Tamils in the island country. The IT Employees wing of the Naam Tamilar Katchi appeals to the international community to create an environment for the Tamils in Sri Lanka, where they can live freely without any fear.

Resolution 9: NTK questions CAB for not including Eelam Tamils

NTK notes with concern the dichotomy in the Indian stand on foreign refugees in the CAB. On the one hand the government of India has done grave injustice by not including the Muslims, on the other hand even Eelam Tamils, who are perceived as Hindus by the Indian state and who are a religious minority in Sri Lanka facing gross persecution, is also not included. The party called upon all Tamil political parties to condemn this move.

Resolution 10: Implement Tamil as official language of Chennai High Court

As the process of making Tamil as the official language of the Chennai High Court, along with English is nearly completed, the Indian government and the Tamil Nadu government must act to implement Tamil as a language of the Chennai High court with immediate effect as per the article 348(2) in the Constitution of India and section 7 of the Official Languages Act, 1963.

Resolution 11: Punish guilty and award exemplary compensation to Mettupalayam wall collapse victims

17 innocent and marginalized people were killed in a wall collapse in Mettupalayam, Coimbatore. We demand that responsibility must be fixed and the guilty punished and also take steps to prevent such incidents from happening again. NTK also demands that exemplary compensation must be given to those who died in the incident.

Resolution 12: Recognize Eelam Tamils as refugees as per international covenants and treaties

This meeting appeals to the Indian Union government and the Tamil Nadu government that Eelam Tamils who took refuge in Tamil Nadu and are living in the Indian Union for a long time, shall be given all the rights as per International Refugee covenants and treaties and be recognized like refugees from any other country living in the Indian Union.

Resolution 13: Place Education on State List

This house insists the Indian Union government withdraw the proposed changes to the education policy that introduces a common curriculum for the entire Indian Union and public exams in primary education. It also demands that Education be placed on the state list by removing it from the concurrent list.

Resolution 14: Prompt punishment for offenders of sexual crime and protection for victims.

We urge to set up special courts to probe sexual offenses against women and children and maximum punishment immediately.

We urge the Union Government of India and the State Government to provide adequate protection to the victims of sexual harassment from the perpetrators of crime.