தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை – தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை கண்டனம்

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை – நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை கண்டனம்

====================================

இன்ஃபோசிஸ், காக்னிஸன்ட், எச்.சி.எல் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்களது இலாப நோக்கிற்காக சட்டத்திற்கு புறம்பான வகையில் தற்போது பணியில் உள்ள ஊழியர்களை விருப்ப ஓய்வு எனும் பெயரிலும், இன்னபிற வழிகளிலும் திடீரென கட்டாய பணி நீக்கம் செய்யும் முடிவை நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒரு புறம் அதிக எண்ணிகையில் புதிய ஊழியர்களை, குறைவான அல்லது ஆரம்ப கட்ட ஊதியத்திற்கு வேலைக்கு எடுத்துக்கொண்டே மறுபுறம் அனுபவமிக்க, இடைநிலை ஊழியர்களை திடீரென அவ்வப்போது இவ்வாறு பணி நீக்கம் செய்து செலவைக் குறைப்பதன் மூலம் தங்களது இலாபத்தை குறிப்பிட்ட காலாண்டிற்கு அதிகரித்துக் காட்டுவதை இத்தகைய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

சமீப காலங்களில் அதிகரித்து வரும் நிறுவனங்களின் இத்தகைய சட்டத்திற்கு புறம்பான, சுயநல நோக்கிற்கு யாரும் பலிகடா ஆகாமலிருக்க, இதுவரை இதனைக் கண்டும் காணாமலிருக்கும் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் நலத்துறை தொழிலாளர் நலன், உரிமை சார்ந்த இந்த பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு தொழிலாளர்களின் உரிமைகளை காலில் போட்டு நசுக்கும் வகையில் விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுத்து பணிபுரியும் ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திடுமாறும் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை கேட்டுக் கொள்கிறது.

இத்தகைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நிர்வாகங்களின் இத்தகைய சட்டத்திற்கு புறம்பான மிரட்டல்களுக்கு எந்த வகையிலும் அடிபணியாது சட்டப்படி தீர்வுகாண, தங்களுக்கு மறுக்கப்பட்டு வரும் தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்டிட நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் அங்கமான தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறையையோ அல்லது இதற்காக தொடர்ந்து போராடி வரும் சக தொழிற்சங்கங்களான FITE, UNITE, NDLF-IT போன்றவற்றின் நிர்வாகிகளையோ தொடர்பு கொள்ளவும்.

தொழிலாளர்கள் ஒன்றுபடும் வரை தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்ட முடியாது!

ஒன்றுபடுவோம்! வென்றெடுப்போம்!

மின்னஞ்சல் : [email protected]

#Voice4LaborLaws @ITEWNTKAgainstLayoff

தொழிலாளர் நலச்சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை
நாம் தமிழர் கட்சி

மாதாந்திர கலந்தாய்வு | நவம்பர் 2019 | NTK ITPW

இன்று நடைபெற்ற கலந்தாய்வில் கீழ்கண்ட கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.

* 12 & 13 அக்டோபர் தேதிகளில் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் பரப்புரையில் நமது பிரிவின் சார்பாக கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

* வாய்ப்புள்ள அனைத்து உறுப்பினர்களையும் நாம் தமிழர் கட்சியின் துளி திட்டத்தில் இணைந்து கட்சியின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உறுதுணையாகஇருக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு மனு தயாரித்து சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

* தமிழில் பெயர் பலகை வைக்க வியாபார நிறுவனங்களை கோர தேவையான துண்டறிக்கைகள் மற்றும் ஆயத்த வேலைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

* கூகுள் மேப் மற்றும் இதர செயலிகளில் வியாபார நிறுவனங்கள் பற்றி விமர்சனம் எழுதும் இடத்தில் பிரபல வியாபார நிறுவனங்களின் பெயரை தமிழில் மாற்றம் செய்ய கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது.

* நமது பிரிவில் உள்ள உறுப்பினர்களை உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் போட்டியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

* உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிட்ட இடங்களில் நமது உறுப்பினர்களையோ அல்லது நமது கட்சியை சார்ந்த மற்ற வேட்பாளர்களையோ ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

* செங்கொடி நினைவு பள்ளியில் கள ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய திட்டம் தீட்ட முடிவு செய்யப்பட்டது.

* தற்சார்பு பொருளாதாரத்தில் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு எனும் தலைப்பில் ஆவனம் தயார்செய்யும் உறுப்பினருக்கு உதவி செய்ய முடிவு செய்யப்பட்டது.

* நமது பிரிவின் அறிவிப்புகளை வெளியிட ட்விட்டர் செயலியில் கணக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டது.

* நாம்தமிழர் பிரிட்டானியா பிரிவின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள செயலியை நடைமுறைக்கு கொண்டு வர தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு உதவி தேவைப்படின் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அக்டோபர் 2019 மாத இதழ் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை | NTK ITPW

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை – அக்டோபர் 2019 மாத இதழை கீழேயுள்ள இணையதள இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

Download “அக்டோபர்-மாத-இதழ்-NTK-ITEW.pdf” Oct-2019-NTK-ITEW.pdf – Downloaded 433 times – 1.90 MB

விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரை | அக்டோபர் 12 & 13, 2019 | NTK ITPW

அக்டோபர் 02, 2019 அன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கலந்தாய்வின் முடிவுப்படி, விக்கிரவாண்டி இடை தேர்தலுக்கான பரப்புரை நமது பாசறையின் உறுப்பினர்களால் அக்டோபர் 12 & 13 தேதிகளில் வேட்பாளர் கந்தசாமி அவர்களுடன் இணைந்து விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் குறித்து திட்டமிடலுக்கான கலந்தாய்வு | அக்டோபர் 02, 2019 | NTK ITPW

அக்டோபர் 12 & 13 விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில், தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பிரிவின் சார்பில் பங்கேற்பது குறித்து திட்டமிடலுக்கான கலந்தாய்வு இன்று (அக்டோபர் 02, 2019) நமது கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பிரச்சாரத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்த நபர்கள் இதில் கலந்து கொண்டனர்.

செப்டம்பர் 2019 மாத இதழ் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை | NTK ITPW

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை – செப்டம்பர் 2019 மாத இதழை கீழேயுள்ள இணையதள இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

Download “செப்டம்பர்-மாத-இதழ்-NTK-ITEW.pdf” Sep-2019-NTK-ITEW.pdf – Downloaded 340 times – 1.70 MB

பேரரசன் பெருவிழா குறித்த கலந்தாய்வு | செப்டம்பர் 22, 2019 | NTK ITPW

  வீரத்தமிழர் முன்னணி சார்பில் தஞ்சையில் விரைவில் நடைபெறவுள்ள அருண்மொழி சோழன்(ராச ராச சோழன்) பேரரசன் பெருவிழாவை மிகச்சிறப்பாக நடத்துவது குறித்த கலந்தாய்வு, அண்ணன் சீமானின் முன்னிலையில் இன்று காலை 11 மணியளவில் அன்னை அருள் திருமண அரங்கம், கிழக்கு தாம்பரத்தில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் நமது பிரிவு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் நமது பிரிவு உறுப்பினர்களிடம் திரட்டப்பட்ட நிதி ரூ 25,000 /- நமது பிரிவின் சார்பில் வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்களிடம் நன்கொடையாக ஒப்படைக்கப்பட்டது.

 

 

பனைத்திருவிழா | செப்டம்பர் 8, 2019 | NTK ITPW

              இன்று சுற்றுச்சூழல் பாசறை நடத்திய பனைத் திருவிழாவில் நமது பிரிவின் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாசறை உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு மகிழ்ந்தனர்.

ஆகத்து 2019 மாத இதழ் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை | NTK ITPW

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை – ஆகத்து 2019 மாத இதழை கீழேயுள்ள இணையதள இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

Download “ஆகத்து-மாத-இதழ்-NTK-ITEW.pdf” Aug-2019-NTK-ITEW.pdf – Downloaded 454 times – 2.58 MB

மாதாந்திர கலந்தாய்வு | ஆகத்து 2019 | NTK ITPW

இன்று நடைபெற்ற கலந்தாய்வில் கடந்த வேலூர் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், செப்டம்பர் 01-ல் தஞ்சாவூரில் நடைபெற உள்ள அருண்மொழி சோழனுக்கு(ராச ராச சோழன்) நமது கட்சியின் சார்பில் நடத்தும் நிகழ்வு குறித்தும் மற்றும் இப்பிரிவின் அடுத்த கட்ட திட்டங்கள் & இப்பிரிவிற்க்கான உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கபட்டது.